பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 12:15 AM IST (Updated: 31 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து மோட்டார்சைக்கிள், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. அப்போது கட்சியினர் தெருத்தெருவாக ஊர்வலம் சென்றனர். பட்டுக்கோட்டை மயில்பாளையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் இந்திராநகர், காசாங்குளம், சீனிவாசபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளின் வழியாக மயில்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறைவடைந்தது. இதற்கு பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் ராமசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் கோவிசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் வைரக்கண்ணு, தாயுமானவன், விஜயரெங்கன், பழனி, சோலை வாசன், குடியரசு, மதிபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார்.

சேதுபாவாசத்திரம்

சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. அப்போது மாட்டுவண்டியில் மொபட் மற்றும் கியாஸ் சிலிண்டரை ஏற்றி அவற்றுக்கு மாலை அணிவித்து மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து கடைத்தெரு வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 
இந்த நூதன போராட்டத்துக்கு தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர் கனி தலைமை தாங்கினார். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் ராமநாதன் முன்னிலை வகித்தார். சிறுபான்மை பிரிவு சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் அஜிஸ் மற்றும் நிர்வாகிகள் முகமது அப்துல் காதர், தமீம் அன்சாரி, முகமது மாலிக், அயூப் கான், முகமது ஹமிதுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story