மணல் கடத்தல்; மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்தல்; மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2022 12:30 AM IST (Updated: 31 March 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

கபிஸ்தலம்:-

கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் அதை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story