மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்;கலெக்டர் அரவிந்த் பேச்சு


மாணவர்கள்  தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்;கலெக்டர் அரவிந்த் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2022 12:02 AM IST (Updated: 1 April 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அரவிந்த், மாணவ- மாணவிகள், இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நாகர்கோவில்,
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அரவிந்த், மாணவ- மாணவிகள், இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிறைவு நாள் நிகழ்ச்சி
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேலநிலைப்பள்ளி மைதானத்தில் 75 -வது சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகள், பல்துறை பணிவிளக்க முகாம்கள் அமைத்த அதிகாரிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர், அவர் பேசியபோது கூறியதாவது:-
வாழ்த்துக்கள்
75 -வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா தொடர் நிகழ்ச்சிகளில் மாரத்தான், சைக்கிள் பேரணி, மணல் சிற்ப போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் அதிக அளவு கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அனைத்து மாணவ -மாணவிகள், இளைஞர்கள் உள்பட அனைவரும் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் வாழ்வினை எதிர்கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு குறித்து மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். 
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார்.
பரிசு
அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயமும், பல்துறை பணிவிளக்க கண்காட்சியில் அரங்குகள் அமைத்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண்ஜெகத் பிரைட், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சத்தியஜோஸ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலாஜாண், மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி (செய்தி) லெனின்பிரபு, முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், ஹேமா, கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் அமுதன், எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தயாபதி நளதம், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story