ரத்த தானம், மருத்துவ பரிசோதனை முகாம்
ராமநாதபுரத்தில் ரத்த தானம், மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவசேவை அணி சார்பில் ரத்த தான முகாம் மற்றும் தைராய்டு சர்க்கரை ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார். மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர்அரபாத் தலைமை தாங்கினார்.. அறக்கட்டளை தலைவர் அப்துல் ரசாக், டாக்டர் ஆசிக்அமீன், தேவிபட்டிணம் ஊராட்சி ஜாகீர் உசேன், பொட்டகவயல் ஊராட்சி முகமது ஹக்கீம், வக்கீல் அப்துல் ஹாலிது, பக்கீர் முகமது, அல்தாப் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகமது ஹனீப் வரவேற்றார். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சவுமியா தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்த தான முகாமை நடத்தினர். 30 பேர் ரத்த தானம் வழங்கினர்.
டாக்டர் ஆசிக்அமீன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தைராய்டு மற்றும் சர்க்கரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சமூக ஆர்வலர் அன்வர் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் முகமது யாசின், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சீனி அன்வர், மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் அபுல் ஹஸன், மாவட்டத் துணைச் செயலாளர் ஹபீப் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் உஸ்மான், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் செய்து இருந்தனர். முடிவில் முகமது கனி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story