காவல்துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்


காவல்துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 1 April 2022 12:08 AM IST (Updated: 1 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் காவல்துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம் நடந்தது

சிங்கம்புணரி,
 சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் தெரு சமுதாயக் கூடத்தில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலம், புழுதிபட்டி, பூலாங்குறிச்சி, உலகம்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Next Story