மதுக்கடையில் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.1¼ லட்சம் தப்பியது
திருவாடானை அருகே மதுக்கடையில் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.1¼ லட்சம் தப்பியது.
தொண்டி,
திருவாடானை தாலுகா, வட்டாணம் அருகே உள்ள தாமோதரன் பட்டினம் கிராமத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த லாக்கரை உடைக்க முடியாமல் கடைக்கு வெளியே தூக்கி வீசிசென்றுள்ளனர். இதனால் அதில் இருந்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் தப்பியது. மேலும் மர்ம நபர்கள் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் செல்வராஜ் தொண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story