பாத்திர கடையில் பணம் திருட்டு
விக்கிரமசிங்கபுரத்தில் பாத்திர கடையில் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வனராஜ் (வயது 50). இவர் விக்கிரமசிங்கபுரம் சன்னதி தெருவில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இதில் பழைய இரும்பு, பித்தளை, செம்பு பொருட்களை வாங்கும் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையின் பக்கவாட்டின் சுவரில் ஏறி மேற்கூரையை கழட்டி உள்ளே இறங்கிய மர்ம நபர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம், 2 சாக்குப்பையில் இருந்த சுமார் 50 கிலோ வரை உள்ள செம்பு கம்பிகளை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காலையில் கடையை திறந்த வனராஜ் பணம், பொருட்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story