வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 1:06 AM IST (Updated: 1 April 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை டவுன் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 21). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் டவுன் குளக்கரை தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டவுன் வயல் தெருவை சேர்ந்த சுரேஷ் (35), நெல்லை மாவட்டம் தேவர்குளம் முத்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (30) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆனந்தை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், செல்வராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story