பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூக்குழி திருிவிழா
ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் அம்மாவாசை என்று பூக்குழி திருவிழா நடைபெறும், இந்த ஆண்டு கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று 12-ம் நாள் திருவிழாவான பூக்குழி திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறப்பு பூஜைக்கு பிறகு தீ வளர்க்கப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்தாண்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். சிறுவர்கள் கரும்புள்ளி குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பூக்குழி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அன்னதானம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் நடைபெற்றன. விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை சார்பில் தேர் முழுவதும் புரனமைப்பு செய்து தரப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் மற்றும் சேவை நிறுவனங்கள் சார்பில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் வைக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story