விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குடோனில் போதை மாத்திரைகள்-ஊசிகள் சிக்கின

விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குடோனில் போதை மாத்திரைகள்-ஊசிகள் சிக்கின
x
தினத்தந்தி 1 April 2022 1:08 AM IST (Updated: 1 April 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், சம்பவம் நடந்ததாக கூறப்படும் குடோனுக்கு நேற்று சென்று, அங்கு கிடந்த ேபாதை மருந்துகள்-ஊசிகளை கைப்பற்றினர்.

விருதுநகர்

பாலியல் பலாத்கார வழக்கு 
விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி மற்றும் பிரவீன் ஆகிய 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 4 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.  மேலும் அவர்களது நண்பர்களையும் அழைத்து சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டனர். 
போதை மருந்துகள்
இதைதொடர்ந்து பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு ஹரிஹரன் மற்றும் ஜீனத் அகமது ஆகிய இருவரையும் போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை செய்ததோடு, அந்த குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 
மருந்து குடோனில் 2 கட்டில்களுடன் படுக்கையறை,  நவீன குளியலறை ஆகியவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கிட்டங்கியில் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றைக் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நடவடிக்கை 
இந்த சம்பவத்தில் கைதாகி கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இவ்வழக்கு விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது.

Next Story