மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 1 April 2022 1:09 AM IST (Updated: 1 April 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பாரதிநகரை சேர்ந்தவர் நேரு. இவரது மகன் கருப்பசாமி (வயது 25).  கருப்பசாமிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கருப்பசாமி ஜவுளி எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் கல்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ராமானுஜபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் கருப்பசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கருப்பசாமியை மீட்டு அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கருப்பசாமியின் தந்தை தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த 2 வாரத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story