8 பேரூராட்சிகளில் நியமன குழு, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர், கீரமங்கலம், ஆலங்குடி, கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளில் நியமனகுழு, வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை,
அரிமளம்
அரிமளம் பேரூராட்சியில் நியமன குழு உறுப்பினர் பதவிக்கு 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தலில் 4-வது வார்டு கவுன்சிலர் வீரப்பன் (தி.மு.க.), 9-வது வார்டு கவுன்சிலர் அழகு (தி.மு.க.), 5-வது வார்டு கவுன்சிலர் முத்தமிழ்ச்செல்வி (தி.மு.க.) 1-வது வார்டு கவுன்சிலர் கணேசன் (சுயே.) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணன் அறிவித்தார்.
அன்னவாசல்
அன்னவாசல் பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினராக 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் குமார் வெற்றி பெற்றார். அதேபோல் வரிவிதிப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்களாக 4-வது வார்டு கவுன்சிலர் அஞ்சலிதேவி (அ.தி.மு.க.), 12-வது வார்டு கவுன்சிலர் அனுசுயா (அ.தி.மு.க.), 13-வது வார்டு கவுன்சிலர் விஜயசாந்தி (அ.தி.மு.க.), 15-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற நியமனக்குழு, வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கீரனூர்
கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் நியமன குழு உறுப்பினராக 6-வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினராக 11-வது வார்டு கவுன்சிலர் வீரையா, 8-வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன், 9-வது வார்டு கவுன்சிலர் கவிதா, 7-வது வார்டு கவுன்சிலர் செல்வி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இலுப்பூர்
இலுப்பூர் பேரூராட்சி தேர்தலுக்கு செயல் அலுவலர் ஆசாராணி தலைமை தாங்கினார். நியமனக் குழு உறுப்பினராக 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முரளிதரன் வெற்றி பெற்றார். அதேபோல் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக 9-வது வார்டு கவுன்சிலர் ஜமீம்பானு (தி.மு.க.), 11-வது வார்டு கவுன்சிலர் ராமாயி (அ.தி.மு.க.), 13-வது வார்டு கவுன்சிலர் ரகுமத்நிஷா (தி.மு.க.), 15-வது வார்டு கவுன்சிலர் கணேசன் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கீரமங்கலம்
கீரமங்கலம் பேரூராட்சியில் நியமன குழு மற்றும் வரிவிதிப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. நியமனக்குழு உறுப்பினராக 8-வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வன்(தி.மு.க.) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக 1-வது வார்டு கவுன்சிலர் நிஷா (தி.மு.க.), 4-வது வார்டு கவுன்சிலர் ராமாயி (தி.மு.க.), 7-வது வார்டு கவுன்சிலர் கனிமொழி (தி.மு.க.), 12-வது வார்டு கவுன்சிலர் ஜெயக்கவுரி (தி.மு.க.) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆலங்குடி
ஆலங்குடி பேரூராட்சியில் நியமன குழு மற்றும் வரி விதிப்பு மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர் தேர்வு நடந்தது. இதில், நியமன குழுவில் 6-வது வார்டு கவுன்சிலர் அகல்லிட்டில்கிரேஸியா தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், வரிவிதிப்பு மேல்முறையீட்டு உறுப்பினர்களாக குழுவில் 3-வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம், 12-வது வார்டு கவுன்சிலர் லெட்சுமணன், 11-வது வார்டு கவுன்சிலர் சையது இப்ராஹிம், 2-வது வார்டு கவுன்சிலர் அமுதா ரெங்கசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த 13-வது வார்டு கவுன்சிலர் ராஜசேகர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக 1-வது வார்டு கவுன்சிலர் கருப்பையா (தி.மு.க.), 5-வது வார்டு கவுன்சிலர் ஜன்னத் பேகம், 9-வது வார்டு கவுன்சிலர் ராஜா, 11-வது வார்டு கவுன்சிலர் பரிதாபேகம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் 11-வது வார்டு கவுன்சிலர் ராமநாதன் (தி.மு.க.), 5-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி (தி.மு.க.), 6-வது வார்டு கவுன்சிலர் இஷா (தி.மு.க.), 14-வது வார்டு கவுன்சிலர் ரவி (சுயே.) ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மேலும் நியமன குழு உறுப்பினர் தேர்தலில் 12-வது வார்டு கவுன்சிலர் ராஜா (தி.மு.க.) போட்டியின்றி தேர்வானார்.
Related Tags :
Next Story