மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன் தள்ளுபடி பெற விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன் தள்ளுபடி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜினு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நிலுவையில் இருந்த 3 ஆயிரத்து 939 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.97 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சரால் மகளிர் சுயஉதவிக் குழுக்கடன்களை சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய ஆணையிட்டதன்படி சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய நிறுவனங்களில் கடன் பெற்று அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அவர்கள் பெற்றுள்ள கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். மேலும் மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு நிறுவனங்களை அணுகி தள்ளுபடி பலன்களை பெறுவதற்கு ஏதுவாக தங்களது குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை ஒருவார காலத்திற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story