மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர்,
மேலூரில் இருபாலர் படிக்கும் அரசு கலை கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணி துறையினர் கல்லூரி வளாகத்தில் 2 இடங்களில் பெரிய அளவில் சுத்திகரிப்பு நீர் நிலையங்களை அமைத்தனர். அதன் பின் பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பழுதாகி குடிதண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது கோடை கால வெயில் காலத்தில் குடி தண்ணீர் கிடைக்காமல் மாணவ-மாணவிகள் சிலர் மய்யக்கமடைந்து அவதிக்குள்ளாகினர். பல முறை புகார்கள் தெரிவித்தும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து மாணவர் இயக்க நிர்வாகி சேது பாண்டி தலமையில் மாணவ- மாணவிகள் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் சப்ளையை சரிசெய்ய வேண்டும், கைகளை கழுவ பயன்படுத்தும் தண்ணீரும் சிறிது நேரம் மட்டுமே கிடைக்கிறது. இவற்றை சரிசெய்யாவிட்டால் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story