காந்தி சிலை பகுதியில் மின்கம்பம், குடிநீர் தொட்டியை சரி செய்ய கோரிக்கை
காந்தி சிலை பகுதியில் மின்கம்பம், குடிநீர் தொட்டியை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலை அமைக்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகவிட்டது. தற்போது அருகில் உள்ளவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். எனவே சிலையை சுற்றிலும் உள்ள இடங்களில் தடுப்பு வேலி அமைத்து, காந்தி சிலையை புதுப்பித்து, அங்கு பூங்கா அமைக்க வேண்டும். மேலும் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின் கம்பம் ஒன்று காந்தி சிலை அருகே உள்ளது. அந்த மின் கம்பத்தின் மேற்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பியாக காட்சியளிக்கிறது. பலத்த காற்று வீசினால் கீழே விழுந்து, அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். இதேபோல் காந்தி சிலை அருகே செயல்பட்டு வந்த குடிநீர் தொட்டி தற்போது மின் மோட்டார் பழுது அடைந்து கடந்த ஒரு வருட காலமாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் இலந்தைகூடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story