புகார்கள் எதிரொலி: ஆர்.டி.ஓ. மீது விசாரணை நடத்த அதிகாரி நியமனம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவு
ஈரோடு ஆர்.டி.ஓ. மீது விவசாயிகள் கொடுத்த புகார்கள், வருவாய்த்துறை அதிகாரிகளின் புகார்கள் குறித்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரியை நியமனம் செய்து கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு ஆர்.டி.ஓ. மீது விவசாயிகள் கொடுத்த புகார்கள், வருவாய்த்துறை அதிகாரிகளின் புகார்கள் குறித்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரியை நியமனம் செய்து கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
புகார்
ஈரோடு மாவட்ட கலெக்டரின் செயல்முறை கடிதமாக, ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவருக்கு அளிக்கப்பட்டு உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட வருவாய் அலகில், ஈரோடு வருவாய் கோட்ட அதிகாரியாக (ஆர்.டி.ஓ.) பணியாற்றி வரும் அதிகாரி, பொது மக்களுக்கும் அலுவலக நடைமுறைக்கும் விரோதமாக நடந்து கொள்வதாகவும், கோப்புகளில் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாகவும், இந்த செயல்பாடுகளுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் புகார் மனு அளித்து உள்ளார். மேலும், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சுப்பு என்கிற முத்துசாமி, கே.ஆர்.தங்கராஜூ ஆகியோர் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன.
விசாரணை அதிகாரி
எனவே ஈரோடு ஆர்.டி.ஓ. மீது வரப்பெற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் குறித்து விசாரணை செய்ய, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வரும், மாவட்ட வருவாய் அதிகாரி நிலை அதிகாரியுமான அ.சாதனைக்குறள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அந்த செயல்முறை கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story