ஐ.எம்.ஏ. நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் நடக்கிறது.
பெங்களூரு: பெங்களூரு சிவாஜிநகரில் ஐ.எம்.ஏ. என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து இருந்தனர். இந்த நிலையில் தங்கநகைகள் தருவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.3,500 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐ.எம்.ஏ. நிறுவனத்திடம் இருந்து அதிகாரிகள் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள விசுவேஸ்வரா டவர், போதியம் பிளாக் 3-வது மாடியில் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதில் தகுதியானவர்கள் கலந்து கொண்டு நகைகளை பெற்று செல்லலாம். இதற்காக 080-29565353, 080-29566556, 080-29604556 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று கொள்ளலாம். 7975568880 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் பெயர், வாடிக்கையாளர் குறியீடு எண்ணையும் அனுப்பலாம்.
Related Tags :
Next Story