விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்; கிராம பஞ்சாயத்து அதிகாரி கைது


விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்; கிராம பஞ்சாயத்து அதிகாரி கைது
x
தினத்தந்தி 1 April 2022 3:00 AM IST (Updated: 1 April 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஒசநகர் அருகே வீட்டு மனைக்கான ஆவணம் வழங்க விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து அதிகாரியை, ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா:  ஒசநகர் அருகே வீட்டு மனைக்கான ஆவணம் வழங்க விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து அதிகாரியை, ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

 வீட்டு மனைக்கான ஆவணம் வழங்க...

 சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா எம்.குட்டெகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் சித்தகிரி சதீஷ். விவசாயி. இவருக்கு, அப்பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தில் வீடு கட்ட சித்தகிரி சதீஷ் முடிவு செய்தார். 

இதனால் நிலத்திற்கு வீட்டு மனை ஆவணம் பெற எம்.குட்டெகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தார். அப்போது கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றும் முருகேசன், வீட்டு மனைக்கான ஆவணம் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு சதீசும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார். 

 ரூ.30 ஆயிரம் லஞ்சம்

ஆனால் மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சதீசிடம் ரசாயன பொடி தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்து அதனை கொடுக்கும்படி சில அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். அதன்படி சதீசும், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி முருகேசனை சந்தித்து ரூ.30 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அதனை முருகேசனும் வாங்கி கொண்டார். 

 கைது

இதனை மறைவாக நின்று கவனித்த ஊழல் தடுப்பு படை போலீசார், லஞ்சம் வாங்கிய முருகேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான முருகேசன் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story