போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பார்வையிட்டு வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story