சாக்கடை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை
சாக்கடை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 48-வது வார்டு, பொன்முத்து நகர் 5,6 வது வீதிகளில் சாக்கடை வசதிகள் இல்லாதததால் வீட்டு முன்பு குழிகள் தோண்டப்பட்டு கழிவுநீர் சேமித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள்.
சில நேரங்களில் குழியில் உள்ள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புக்குள் செல்வதால் அன்றாடம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறனர். மேலும் சாக்கடை குழிகள் 4,5 அடி தோண்டப்பட்டுள்ளதால் சிறுவர்கள் சாலையில் விளையாடும் போது தவறி விழும் அபாயம் உள்ளது. சிறுவர்கள் விளையாடும் போது விளையாட்டு பொருட்கள் விழுந்து விடுவதால் அதனை எடுக்கின்றனர். அதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவுகிறது. மேலும் வனங்களிலும், நடந்து செல்லும்போது வீதிகளில் செல்லும் போது சாக்கடை நீரை மிதித்துக்கொண்டுதான் வீட்டுக்குள் செல்லும் நிலையுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சாக்கடை வசதிகள் செய்து தர கோரி பலமுறை மாநகராட்சி, மண்டல அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருகிற திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story