வீணாகும் குடிநீர்


வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 1 April 2022 4:00 PM IST (Updated: 1 April 2022 4:00 PM IST)
t-max-icont-min-icon

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர் 
அவினாசி  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் முன் மாதக் கணக்கில் குடிதண்ணீர் வீணாகி வந்தது. அதை தொடர்ந்து குழாய் சீரமைக்கப்படும்.சீரமைத்த சில நாட்களில் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்ப்பட்டு மறுபடியும்  மறுபடியும் தண்ணீர் வீணாகிறது. குடிநீர் வீணாகி பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் பெரிய பள்ளம் ஏற்பட்டு விட்டது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய்த்தொற்று உருவாகவும் வாய்பு உள்ளது. பள்ளி செல்லும் மாணவிகள்  காலை மாலை இருவேலையும் இந்த இடத்தை கடக்கும் போது துர்நாற்றம் தாங்க முடியாமல்  மூக்கை கைகளால் பொத்தி செல்வது வாடிக்கையாகி விட்டது. எனவே குழாய் உடைப்பு சீரமைப்பை கடமைக்காக செய்யாமல், கடமையாக முறையாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளனர்.  
கிடப்பில் போடப்பட்ட வாராங்கால் அமைக்கும் பணி
 பல்லடம் வட்டம் ஆறு முத்தாம் பாளையம் ஊராட்சி உட்பட்ட சேகாம் பாளையம் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியுமாக உள்ள குளியில்  வயதானவர்கள் சிறுவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் என அனைவருக்கும் அதன்வழியே நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story