ரோந்து போலீசாருடன் கவுன்சிலரின் கணவர் தகராறு: கவுன்சிலரின் கணவர் நீக்கம்


ரோந்து போலீசாருடன் கவுன்சிலரின் கணவர் தகராறு: கவுன்சிலரின் கணவர் நீக்கம்
x
தினத்தந்தி 1 April 2022 4:33 PM IST (Updated: 1 April 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

ரோந்து போலீசாருடன் கவுன்சிலரின் கணவர் தகராறு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

சென்னை ராயபுரம், 51-வது வார்டு மாமன்ற கவுன்சிலர் நிரஞ்சனா. இவரது கணவர் ஜெகதீசன். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ராயபுரம், ஜே.பி., கோவில் தெருவில் தனது ஆதரவாளர்களுடன் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வண்ணாரப்பேட்டை போலீசார் கும்பலாக நிற்பது குறித்து அவர்களிடம் விசாரித்தனர். அப்போது ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராயபுரம் கிழக்கு பகுதி 51வது வார்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக நிர்வாகி ஜெகதீசன் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.


Next Story