கோத்தகிரி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோத்தகிரி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
கோத்தகிரி
தமிழக வருவாய்த்துறை அரசாணையின்படி நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் தொடந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோத்தகிரி தாசில்தார் காயத்ரி உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் குமார், சபீர் கான், கிராம உதவியர் ராமமூர்த்தி மற்றும் நில அளவையர்கள் அடங்கிய குழுவினர் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரம் செல்லும் ஓடையில், கரும்பாலம் பகுதியில் நில அளவை செய்தனர். அப்போது அங்கு சுமார் 20 சென்ட் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தேயிலை செடிகள். பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது உடனடியாக அங்கு பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகளை அதிகாரிகள் அகற்றியதுடன் ஆக்கிரமிப்பில் இருந்த 20 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story