கூடலூரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு


கூடலூரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
x
தினத்தந்தி 1 April 2022 5:19 PM IST (Updated: 1 April 2022 5:19 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.



கூடலூர்

கூடலூர் அருகே புத்தூர்வயல் அரசு உயர்நிலை பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். ஈரோடு கலை அறிவியல் கல்லூரி சமூகவியல் துறை தலைவர் பகவதிராஜ், உதவி பேராசிரியர் அனிதா முன்னிலை வகித்தனர். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் பிரதீப் வரவேற்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, கல்வி வாழ்வின் மேம்படுத்த உதவுகிறது. ஊட்ட சத்து உணவுகள் எடுத்துக்கொள்ளும் போது திறமையான செயல்பாடுகளால் மேம்பாடு அடைய முடியும் என்றார். கல்வியின் அவசியம் குறித்து கல்லூரி மாணவர் ஸ்ரீராம் பேசினார். தன் சுத்தம் மற்றும் பொதுசுகாதாரம் குறித்து கல்லூரி மாணவர்கள் சிவதர்ஷினி, வேலன் ஆகியோர் பேசினார்கள். பாம்பு வாழ்வு முறை மற்றும் மனித பாம்பு மோதல், பாம்பு கடிக்கு முதலுதவி குறித்து சந்திரகுமார் மற்றும் தரனிதரன் ஆகியோர் பேசினர். பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story