கூடலூர் கோத்தகிரியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கூடலூர் கோத்தகிரியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்
கூடலூர் தாலுகா பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரை சோதனை செய்தபோது 250 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேவாலா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் மரப்பாலத்தை சேர்ந்த சரத்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கோத்தகிரி போலீசார் கோத்தகிரி அரவேனு அருகே உள்ள தவிட்டு மேடு பஸ் நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கீழ் கைத்தளாவைச் சேர்ந்த ரமேஷ் குமார் (24) என்பதும், கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அங்கே நின்றததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story