கோடப்பமந்து கால்வாயில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்


கோடப்பமந்து கால்வாயில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 1 April 2022 5:19 PM IST (Updated: 1 April 2022 5:19 PM IST)
t-max-icont-min-icon

கோடப்பமந்து கால்வாயில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

ஊட்டி

ஊட்டி நகரில் கோடப்பமந்து கால்வாய் பிரதான கால்வாயாக உள்ளது. இங்கு கனமழையின் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் ஊட்டி ஏரியில் சேகரமாகிறது. கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்புகள், பொருட்கள் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் கால்வாயில் குவிந்து கிடந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இந்த கால்வாயை பராமரித்து வரும் பொதுப்பணித் துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து கலெக்டர் அறிவுறுத்தலின்படி ஊட்டி நகராட்சி மூலம் கோடப்பமந்து கால்வாயில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. தண்ணீரில் இறங்கி அகற்ற முடியாததால், பொக்லைன் எந்திரம் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றி லாரியில் கொண்டு செல்லப்பட்டது. தூய்மை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story