வெண்குன்றம் மலையில் பயங்கர தீ


வெண்குன்றம் மலையில் பயங்கர தீ
x
தினத்தந்தி 1 April 2022 5:27 PM IST (Updated: 1 April 2022 5:27 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் பயங்கர தீ பரவி எரிந்ததால் மூலிகை மரங்கள் நாசமாயின.

வந்தவாசி
வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் பயங்கர தீ பரவி எரிந்ததால் மூலிகை மரங்கள் நாசமாயின.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் தவளகிரீஸ்வரர் மலை உள்ளது. இங்குள்ள கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத்தன்று இங்கு ஏற்றப்படும் தீப ஒளியால் மலையே ஒளி வெள்ளத்தால் பிரகாசிக்கும். இந்த மலையில் அபூர்வ வகை மூலிகை மரங்கள் உள்ளன. 

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர். காற்று வேகமாக அடித்ததால் தீ மற்றபகுதிகளுக்கும் பரவிஎரிய தொடங்கியது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,.
தீயணைப்புத்துறை தவிப்பு

தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் தவித்து நின்றனர். மேலும் இதுகுறித்து வந்தவாசி வடக்குப் போலீசார் மலை மீது தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
============

Next Story