கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் மன்ற கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் மன்ற கூட்டம் நடைபெற்றது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் மன்ற கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூய யோவான் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் சுமித்ராஜ் பிரேம்குமார் கலந்து கொண்டு, மின்வேதிக்கலம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த கருத்துக்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கூட்டத்தில் இயற்பியல் துறை பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை மாணவ செயலாளர் சுவேதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர் ஜாக்குலின் அமிலியா, மன்ற செயலாளர் முத்துப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story