வளர்ச்சித்திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
வந்தவாசி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வந்தவாசி
வந்தவாசி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வந்தவாசி மற்றும் தெள்ளார் ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி செயலர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தது. கூட்டங்களில் மாவட்ட கூடுதல் கலெக்டரும் மாவட்ட திட்ட இயக்குனருமான மு.பிரதாப் பங்கேற்று பேசியதாவது:-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். ஒரு சிலர் பணிகளை விரைந்து முடிக்கும்போது, மற்றவர்களால் ஏன் முடியவில்லை.
இந்த மாதத்துக்குள் அனைவரும் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள், பொறியாளர் பிரிவினர் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டங்களில் தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் இ.கமலாட்சி இளங்கோவன், உதவி செயற் பொறியாளர் சபாநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.ராஜன்பாபு, ஆர்.குப்புசாமி, சு.வி.மூர்த்தி, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ரூ.3.50 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிட பணிகள், தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் உறிஞ்சு குழாய் அமைப்பு மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story