யூரியா தட்டுப்பாட்டுக்கு தீர்வுகோரி விவசாயிகள் நூதன போராட்டம்
யூரியா தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
யூரியா தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மாதமாக யூரியா தட்டுப்பாடு நீடித்து வருகிறது. யூரியா தட்டுப்பாட்டுக்கு தீர்வுகான வலியுறுத்தி திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு புருஷோத்தமன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தங்களின் கண்களை துணியால் கட்டிக் கொண்டு விளையாடுவது போன்றும், அவர்கள் மீது வண்ணப் பொடிகளை வீசி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
யூரியா தட்டுப்பாடு மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது. இருப்பினும் அதிகாரிகள் போதுமான அளவு யூரியா வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். யூரியாவை ஒருசிலர் பதுக்கி வைக்கின்றனர். கடைகளில் உரங்களின் விலை, இருப்பு தகவல் பலகை எழுதி வைக்காமல் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். விவசாயிகள் யூரியா வாங்க வரும்போது இணை பொருட்களை வாங்க சொல்கின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு உடனடியாக வராமல் பல மணி நேரத்துக்கு பிறகு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் கலப்பட உரங்களை உருவாக்கி கள்ளச்சந்தையில் விற்கின்றனர். எனவே யூரியா தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story