திருச்செங்கோட்டில் சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம்
திருச்செங்கோட்டில் சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் மது மற்றும் சாராயத்திற்கு எதிராகவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள், பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செங்கோடு திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் மது மற்றும் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன. இதில் திருச்செங்கோடு தாசில்தார் அப்பன்ராஜ், வருவாய் ஆய்வாளர் பாலு, கிராம நிர்வாக அலுவலர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story