மோகனூர் அரசு மகளிர் மாதிரி பள்ளியில் செங்காந்தள் தமிழ் மன்ற இலக்கிய விழா


மோகனூர் அரசு மகளிர் மாதிரி பள்ளியில் செங்காந்தள் தமிழ் மன்ற இலக்கிய விழா
x
தினத்தந்தி 1 April 2022 7:05 PM IST (Updated: 1 April 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அரசு மகளிர் மாதிரி பள்ளியில் செங்காந்தள் தமிழ் மன்ற இலக்கிய விழா

மோகனூர்:
மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் செங்காந்தள் தமிழாய்வு மன்றம் சார்பில் இலக்கிய விழா நடைபெற்றது. பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சுடரொளி தலைமை தாங்கினார். பிளஸ்-1 மாணவி ஜெசிகா வரவேற்றார். பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் திலகம் கலந்து கொண்டு இலக்கியங்களில் பெண்கள் என்ற தலைப்பில் பேசுகையில், சங்ககால பெண் புலவர்களின் சிறப்புகளை எடுத்துரைக்க நேரம் போதாது. 
காரைக்கால் அம்மையார், ஆண்டாள் மற்றும் அவ்வையாரின் கருத்துக்களை உள்வாங்கி அதன்படி செயல்பட வேண்டும். தமிழ் மொழியில் உள்ள அறம் சார்ந்த விழுமியங்களை மாணவிகள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். இலக்குகளை தீர்மானித்து வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் பார்வதி, தனலட்சுமி, வீரராகவன், பாண்டியராஜன், தீபா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவி சகானா நன்றி கூறினார்.

Next Story