கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே நின்று கத்தியைகாட்டி மர்ம நபர் மிரட்டுவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது
கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே நின்று கத்தியைகாட்டி மர்ம நபர் மிரட்டுவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது
வடவள்ளி
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
அவர்களிடம் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தினார்.
இந்த நிலையில் விடுதிக்கு வெளியே நின்று கத்தியைகாட்டி மர்ம நபர் மிரட்டுவது போன்ற வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
இது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது. இது மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story