திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுவரும் தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவமனை சுற்றுப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை அகற்ற மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் புற நோயாளிகள் காத்திருப்பு அறை, நோயாளிகள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கு பூங்கா அமைக்க வேண்டும், மருத்துவமனை முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும், நோயாளிகள், பொது மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இன்னொரு நுழைவுவாயில் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளிடம் சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். ஆய்வின் போது மருத்துவ அலுவலர் குமரவேல், டாக்டர்கள் சிவகுமார், பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story