ஆம்பூர் அருகே இடத்தை சமன் செய்ய வந்த பொக்லைன் எந்திரத்தை கிராம மக்கள் முற்றுகை
ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக இடத்தை சமன்செய்ய வந்த பொக்லைன் எந்திரத்தை கிராமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக இடத்தை சமன்செய்ய வந்த பொக்லைன் எந்திரத்தை கிராமக்கள் முற்றுகையிட்டனர்.
குடியிருப்பு கட்ட எதிர்ப்பு
ஆம்பூரை அடுத்த சின்னபள்ளிகுப்பம் பகுதியில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித்தர மேல்சாணங்குப்பம் பகுதியில் இங்குள்ள ஏரி உபரி நீர் வெளியேறும் இடத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்புகள் கட்ட மேல்சாணங்குப்பம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மேல்சாணங்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டும் பணிகளுக்காக பொக்லைன் எந்திரம் மூலம் இடத்தை சமன் செய்ய முயன்றனர்.
முற்றுகை
இதையறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாசில்தார் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் பணிகள் செய்யாமல் பொக்லைன் எந்திரம் திருப்பி அனுப்பப் பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story