திருட்டு வழக்குகளில் 9 பேர் கைது: ரூ.7.40 லட்சம் பொருட்கள் மீட்பு


திருட்டு வழக்குகளில் 9 பேர் கைது: ரூ.7.40 லட்சம் பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 1 April 2022 7:26 PM IST (Updated: 1 April 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்வதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 
இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 9 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள், பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் மீட்கப்பட்டன. 
இதையடுத்து சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார். மேலும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story