வாணியம்பாடியில் கடையில் பதுக்கிய 10 கிலோ குட்கா பறிமுதல்


வாணியம்பாடியில் கடையில் பதுக்கிய 10 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2022 8:06 PM IST (Updated: 1 April 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் கடையில் பதுக்கிய 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி

வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் நேதாஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மளிகைக் கடையில் சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கடையில் இருந்த 2 மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதில் இருந்த 10 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான கடை உரிமையாளர் தவுலத்கான் என்பவரை தேடி வருகின்றனர்.

இதே போன்று சி.எல்.சாலையில் உள்ள கடையில் ரூ.1,000 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது சம்மந்தமாக கடையில் இருந்த சங்கர் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story