திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 8:57 PM IST (Updated: 1 April 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி:
தேர்வு கட்டண உயர்வை கண்டித்து திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற கூட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்வு கட்டணம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்தக்கோரியும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி அரசு அறிவியல் கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கோஷங்கள் 
ஆர்ப்பாட்டத்திற்கு  கல்லூரி கிளை ஒருங்கிணைப்பாளர் வளவன் தலைமை தாங்கினார். குணால் முன்னிலை வகித்தார். இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் பேசினார். இதில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கலந்துகொண்டு தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Next Story