தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்


தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 9:03 PM IST (Updated: 1 April 2022 9:03 PM IST)
t-max-icont-min-icon

தனியார் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு இடையே விழிப்புணர்வு கூட்டங்களை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு இடையே விழிப்புணர்வு கூட்டங்களை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று தனியார் தொழிற்சாலையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் முன்னிலை வகித்து பேசியதாவது:-

தொழிலாளர்கள் தயக்கம் இன்றி புகார் கூற முன்வரவேண்டும், பாலியல் ரீதியான அணுகுமுறை உள்பட பல்வேறு இடர்பாடுகள் என எது வந்தாலும் சிப்காட் போலீஸ் நிலையத்தையோ 100 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும். இது தவிர தொழிற்சாலை பகுதியில் கஞ்சா பழக்கம், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற்றாலும் 100 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தெரிவித்தார்.


Next Story