நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படுமா?
நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்வே கேட்
நீடாமங்கலத்தில் ெரயில்நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனால் தினமும் பலமுறை ெரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் நெடுஞ்சாலை பயணிகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு மாற்றுவழி பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுச்சாலை அமைக்க மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை மூலம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. பின்னர் நான்குவழிச்சாலை திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது, அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலை திட்டம் கைவிடப்பட்டது.
இருவழிச்சாலை திட்டம்
இ்தையடுத்து நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் தொடங்கி நடந்து வந்தது. திருச்சி முதல் தஞ்சை வரை பணிகள் நிறைவடைந்தது. தஞ்சை முதல் நாகப்பட்டினம் வரையிலான பணிகளில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இருவழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுவதும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நீடாமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.20 கோடியை அரசின் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். இதையடுத்து மண்பரிசோதனை செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையால் திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ெரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது.
ஆரம்ப கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு
நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக கடந்த 2015-2016-ம் நிதியாண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதியளித்துள்ளது. ஆனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட நீடாமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்ட பணியை தொடங்க பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையின் பேரில் கடந்த ஆண்டு அமைச்சர் ஏ.வ.வேலு சட்டமன்றத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்று நடப்பாண்டிலேயே மேம்பாலம் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.
ஆரம்ப கட்ட பணிகளுக்காக ரூ.10.67 கோடியும், தமிழக அரசால் நிதியும் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. தினமும் சரக்கு ெரயில் மற்றும் பயணிகள் ெரயில்கள், ெரயில் என்ஜின்கள் அடிக்கடி இயக்கப்படும் போது ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.
விரைவில் தொடங்கப்படுமா?
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளூர் மக்கள் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இதுவரை ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படாமல் உள்ளது மக்களிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story