பழனி முருகன் கோவிலில் ஏழை பக்தர்களுக்கு எட்டாக்கனியாகும் ரோப்கார் சேவை
பழனி முருகன் கோவிலில் ரூ.15 கட்டண முறை ரத்து செய்யப்பட்டதால் ரோப்கார் சேவை ஏழை பக்தர்களுக்கு எட்டாக்கனியாகும் நிலை உள்ளது.
பழனி:

ரோப்கார் சேவை
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன.
பாதயாத்திரை பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆகியோர் மேற்கண்ட படிப்பாதைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.
ரூ.15 கட்டண முறை ரத்து
இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு ரூ.15-ம், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு ரூ.50-ம் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்காரில் ரூ.15 கட்டண முறை நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.50 கட்டண சேவை மட்டுமே தொடர்ந்து வருகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பழனி முருகன் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதில் ரோப்கார் வழியே செல்லும் பக்தர்களிடம் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை-எளிய பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவையில் மீண்டும் ரூ.15 கட்டண முறையை கொண்டுவர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
ஏழை பக்தர்கள் பாதிப்பு
தண்டபாணி (ஒட்டன்சத்திரம்):- ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்களும் பழனி ரோப்காரில் பயணிக்கும் வகையில் ரூ.15 கட்டண முறை இருந்தது. ஆனால் தற்போது ரூ.50 கட்டண முறை மட்டுமே உள்ளதால் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்று (அதாவது நேற்று) குடும்பத்துடன் சேர்த்து 5 பேர் வந்தோம். ரோப்காரில் சென்றுவர ரூ.500 செலவானது. ஆனால் ரூ.15 கட்டண சேவை இருந்தால் ரூ.150 மட்டுமே செலவு ஆகியிருக்கும். அதாவது 3 மடங்கு பணம் விரயமாகிறது. எனவே மீண்டும் ரோப்கார் சேவையில் ரூ.15 கட்டண முறையை அமல்படுத்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன் (கோவை):- தமிழகத்தில் பழனி முருகன் கோவிலில் மட்டுமே ரோப்கார் சேவை உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் தற்போது ரோப்காரில் ரூ.15 கட்டண முறை ரத்தானது கவலை அளிக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ரோப்காரில் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஏழை பக்தர்களுக்கு ரோப்கார் சேவை எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனவே மீண்டும் ரூ.15 கட்டண முறையை கொண்டுவர அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ் (திண்டுக்கல்):- பழனி கோவிலுக்கு குழந்தைகள், முதியோர்களுடன் வரும் போது, ரோப்கார் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் தற்போது ரோப்கார் சேவையில் ரூ.15 கட்டண முறை இல்லாததால் பணம் விரயமாகிறது. இதனால் பாதிபேர் படிப்பாதை வழியாகவும், குழந்தைகள், முதியோர்கள் மட்டுமே ரோப்காரிலும் செல்லும் நிலை உள்ளது. எனவே மீண்டும் ரோப்காரில் ரூ.15 கட்டண முறையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story