பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரி மோதி முதியவர் பலி
பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு சம்பிகேஹள்ளியை சேர்ந்தவர் ராமைய்யா (வயது 76). இவர், நேற்று முன்தினம் பாகலூர் மெயின் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே சாலையில் வந்த மாநகராட்சியின் குப்பை லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது.
இதனால் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமைய்யா தலையில் பலத்தகாயம் அடைந்து உயிர் இழந்தார். உடனே லாரியை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். லாரியை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story