ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி


ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 1 April 2022 9:33 PM IST (Updated: 1 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

குற்றவாளிகளின் செயல்பாடுகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூர்

வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த்சின்ஹா உத்தரவின் படியும், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா அறிவுறுத்தலின் பேரிலும் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் குற்ற பின்னணி குறித்த சரித்திர பதிவேடுகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் நிலைய எழுத்தர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட தினசரி நடவடிக்கைகளை எவ்வாறு ஆன்லைனின் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. 

Next Story