உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் சாலை மறியல்
மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து நாகையில் உறவினர்கள் 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறித்து நாகையில் உறவினர்கள் 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி தற்கொலை
நாகை அருகே தனியார் கல்லூரி மாணவி சுபாஷினி (வயது19) கடந்த 30-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியில் கட்டணம் கட்ட கூறி கல்லூரி வாசலில் நிற்க வைத்து அவமானப்படுத்தியதால் மாணவி சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்றுமுன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3-வது நாளாக சாலை மறியல்
இதை தொடா்ந்து கல்லூரி தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து, 3-வது நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல கலெக்டர் அலுவலகம் முன்பு மற்றும் நாகூர்-நாகை சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story