பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு
திண்டுக்கல்லில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் 23 பேர் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து தற்காலிக செவிலியர்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இதுகுறித்து கோவிட்-19 மருத்துவ ஒப்பந்த பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் சாலமன் கூறுகையில், கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எங்களை பணியில் சேர்த்தனர். அப்போது பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தரம் செய்வதாக கூறினர். இந்தநிலையில் திடீரென திண்டுக்கல் உள்பட மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 400 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா சிகிச்சைக்கு எங்களுக்கு ஊக்கத்தொகை தருவதாக கூறினர். அதனை இதுவரை தரவில்லை.
மேலும் ஒரு மாத சம்பளமும் தரவில்லை. மேலும் நாங்கள் அனைவரும் எம்.ஆர்.பி. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கிறோம். தற்போது தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. எங்களுக்கு பணி அனுபவம் இருப்பதோடு, எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சியும் பெற்று இருக்கிறோம். இந்த வேலையை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம். எனவே புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் எங்களுக்கு பணி வழங்க வேண்டும். இதற்காக தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.
Related Tags :
Next Story