இழப்பீடு வழங்காததை கண்டித்து பதாகை வைத்த நில உரிமையாளர்கள்


இழப்பீடு வழங்காததை கண்டித்து பதாகை வைத்த நில உரிமையாளர்கள்
x
தினத்தந்தி 1 April 2022 10:02 PM IST (Updated: 1 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது இழப்பீடு வழங்காததை கண்டித்து பதாகை வைத்த நில உரிமையாளர்கள்

திருக்கடையூர்:
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலைக்காக கொள்ளிடத்தில் இருந்து பொறையாறு வரை உள்ள நிலம் மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல ஆக்கூர் அருகே பூந்தாழையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சதுரஅடிக்கு ரூ.150 என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை துறை மூலம் சதுரஅடி 3 ரூபாய் 80 பைசா மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிகிறது. நிலம் கொடுத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, மாவட்ட கலெக்டர் 3 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால், இதுவரை எவ்வித கூடுதல் இழப்பீடும் வழங்கப்படாத நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து நிலமெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை கண்டித்தும், உரிய இழப்பீடு வழங்காதவரை தங்களது நிலங்களில் எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என நில உரிமையாளர்கள் பதாகை வைத்துள்ளனர்.

Next Story