கோவிலில் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம்


கோவிலில் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 10:05 PM IST (Updated: 1 April 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஒன்றியம் ஆதிதிருவரங்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த அரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாதபெருமாள் சயனநிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் அன்னதான திட்டத்தின் கீழ் தினசரி 50 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படடு வந்தது. இந்நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதையொட்டி தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி வழங்கினார். 

இதையடுத்து நேற்று முதல் தினசரி 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன் தொடங்கி வைத்தார். அப்போது செயல்அலுவலர் அருள், எழுத்தர் லோகநாதன், ஊழியர் சிவபிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக்செரிப்  மற்றும் கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர். 

Next Story