பழனி வையாபுரிகுளத்தில் ஜி.பி.எஸ். கருவி மூலம் அளவீடு
பழனி வையாபுரிகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஜி.பி.எஸ். கருவி மூலம் அளவீடு பணி நடைபெற்றது.
பழனி:
பழனியில் உள்ள வையாபுரிகுளம் 298 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் பழனி பகுதியின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்துள்ளதுடன், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் குளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து வையாபுரிகுளம், சிறுநாயக்கன்குளத்தில் பொதுப்பணித்துறை சார்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்தநிலையில் நேற்று வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மீண்டும் அளவீடு பணி நடைபெற்றது. அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜி.பி.எஸ். கருவி மூலம் அளவீடு செய்தனர். இந்த பணியின்போது பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், உதவி பொறியாளர் நாகராஜ் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆக்கிரமிப்பை அகற்ற அளவீடு பணி அவசியமாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஜி.பி.எஸ். கருவி மூலம் மறு அளவீடு நடைபெற்றது. இதன்மூலம் குளத்தின் பரப்பளவு துல்லியமாக கண்டறியப்படும். மேலும் நீர்ப்பிடிப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏதுவாக இருக்கும் என்றனர்.

Related Tags :
Next Story