போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 April 2022 10:16 PM IST (Updated: 1 April 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழகத்தில் கஞ்சா, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். மேலும் கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சோதனைகள் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதே போல குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் போலீஸ் சார்பில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலையில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதாவது பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், "போதை பழக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில் பொதுமக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. போதை பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனே போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் வாட்ஸ் அப் எண்ணை (7010363173) ஒரு மூதாட்டியை வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல அண்ணா பஸ் நிலையம் மற்றும் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கி போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

Next Story