சிலிண்டர் வெடித்து கூரை வீடு சேதம்


சிலிண்டர் வெடித்து கூரை வீடு சேதம்
x
தினத்தந்தி 1 April 2022 10:23 PM IST (Updated: 1 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் சிலிண்டர் வெடித்து கூரை வீடு சேதமானது.

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள குரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி ஜெயராணி நேற்று மதியம் கியாஸ் அடுப்பில் சமையல் செய்வதற்காக சிலிண்டரை ஆன் செய்தார். அப்போது கியாஸ் கசிவு காரணமாக சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராணி, பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். 

மேலும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 10 மாத குழந்தையை ராஜா விரைந்து சென்று தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியதால் வீடு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் மற்றும் மணல் மூலம் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து கரியாலூா் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story